April 29, 2026
Pongal Prize
Share

வேலூர் மத்திய மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இன்று (17-01-2025) பேரணாம்பட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேலூர் மத்திய மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரேவதி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத் MC வரவேற்று பேசினார்.

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் திரு. கு.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார தலைவர்கள் சங்கர், வீராங்கன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கரன், நகர, வட்டார நிர்வாகிகள் தமிழரசன், ஜலந்தர், ரஜினிகாந்த், பழனிவேல், சுமன், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நகர நிர்வாகி சக்திவேல் நன்றியுரை கூறி இனிதே முடித்துவைத்தார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *