Book Fair 3 ed Time
காஞ்சி மாநகரில் மூன்றாவது ஆண்டாகப் புத்தகக் கண்காட்சி தொடங்க இருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் எல்லா மாநகரங்களிலும் புத்தகக் கண்காட்சியை தொடந்து நடத்த திட்டமிட்ட வண்ணம், காஞ்சியில் வரும் 31-01 2025 முதல் 10 -02-205 வரை 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள “அண்ணா காவல் அரங்கம்” எதிரில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

மொத்தம் 100 அரங்குகளில் புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் அமைய உள்ளன.
தினசரி பிற்பகல் முதல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பள்ளி – கல்லூரி மாணவ – மாணவியரின் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை நேரங்களில் பிரபலங்கள் பங்கேற்கும் கருத்தரங்க நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.
பார்வையாளர்களுக்கு அரங்கத்தில் உணவரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள புத்தக ஆர்வலர்கள் தினசரி புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கவும், நிகழ்ச்சிகளை கண்டு மகிழவும் வருக வருக என காஞ்சி மாநாகராட்சி அனைவரையும் வரவேற்கிறது.
