தற்பொழுதுள்ள வேளாண் துறை செயலாளர் ஓய்வு பெறவுள்ள நிலையில் – மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் புதிய வேளாண் துறை செயலாளரை நியமிக்க வேண்டும் என பி.ஆ.பாண்டியன் இன்று சென்னையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி ஆணையர் என்கிற பதவி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு தனி பதவியாக வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கும் செயலாளர் தனியாக நியமிக்கப்பட்டார். பிறகே மாற்றம் கொண்டுவரப்பட்டது.
நிதி, உணவுத்துறை, நீர்ப்பாசன துறை, பேரிடர் மேலாண்மை, போன்ற பல துறைகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்திலான செயலாளர்கள் நியமிக்கப்படும் போது வேளாண் துறைக்கு செயலாளர் நிலையில் அதிகாரி நியமிப்பது நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகளையும், தாமதங்களையும் உருவாக்கும்.
குறிப்பாக வேளாண் பணி காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உணவு உற்பத்தி பெருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவசரகாலமாக சில திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றுகிற போது காலதாமதங்களும் தடைகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
மேலும் தற்போது வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் )தாக்கல் செய்யும்போது கூடுதல் தலைமை செயலாளர் நியமிக்கப்படுவது தான் பொருத்தமாக இருக்கும்.
வேளாண் கொள்கைகளும் மத்திய அரசை சார்ந்து உள்ள நிலையில் அன்றாடம் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு இணையான பணி நிலையிலான தொடர்புடைய புலமை மிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
உயர் அதிகாரிகள் நியமிக்கும் போது அரசியல், ஜாதி, மத, இன உணர்வுக்கு அப்பாற்பட்டு தகுதி திறமையின் அடிப்படையில் நியமனம் செய்வதை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டிப்புடன் பின்பற்ற முன்வர வேண்டும்.
என்பதான வேண்டுகோள்களை பி.ஆர்.பாண்டியன் முன்வைத்துள்ளார்.
