அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். தொடர்ந்து அவர் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை காலை வாஷிங்டன்னில் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்தார். இது தொடர்பாக மோடி தாது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை நான் வாஷிங்கடன்னில் சந்தித்தேன். அவருடன் இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
