June 23, 2026
IMG-20250215-WA0001
Share

இந்த கொடுமையை செய்தவர்கள் மனிதர்கள் வடிவில் இருக்கும் பேய்கள்…

கடந்த 2024ல், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் திருவண்ணாமலையில், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணத்தில் பஞ்சமி நிலம் மீட்புப் போராட்டம் நடந்தது. சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு உழுது பட்டியலின பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து தலித் மக்கள் பஞ்சமி நிலத்தில் குடியேறியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி கொடியை நட்டு வைத்து விவசாயத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அப்படி மீட்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், சமீபத்தில் தலித் விவசாயி பயிரிட்டிருந்த உளுந்துச் செடிகளை, நேற்று ட்ரோன்கள் மூலம் களைக்கொல்லியைத் தெளித்து, முற்றிலுமாக அழித்திருக்கின்றனர் ஆதிக்க ஜாதி வெறியர்கள். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பயிர் அழிக்கப்பட்டிருக்கிறது.

இச்செய்தியைப் பார்க்கும்போதே குலை நடுங்குகிறது. இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிக்க ஜாதி வெறியர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

தோழர் புலியூர் பதிவிலிருந்து.

 

திராவிட மாடலின் ‘சமூக நீதி’ என்றால் என்ன?

சாதிகளுக்கேற்ப அடையாள நினைவுகளை எழுப்பி தன்னுடைய அதிகார தேவைக்காக சாதியமைப்பை தக்க வைத்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் இல்லை.

சாதிக்கு எதிரான மனப்பான்மை உருவாக்குவதற்கு எந்த வேலைத்திட்டமும் அதனிடம் இல்லை.சாதிவெறி கொண்டலையும் சமூகங்களிடம் அதனை கைவிடுவதற்கான ஆக்கபூர்வமான உரையாடல் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

சாதியமைப்பை எதிர்கொள்ள விரும்பாதவர்களுக்கு மதவாத எதிர்ப்பு என்பது ஒரு முகமூடியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உண்மையில் மோடி வேண்டாம் என்பது இவர்களின் விருப்பமல்ல.மோடிகள் வேண்டும் என்பது தான் இவர்களின் உள்ளார்ந்த விருப்பம்.

அப்போது தான் அவர்களைக் காட்டி உள்ளூர் எதார்த்தங்களிலிருந்து தப்ப முடியும்.

இப்போது இவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் எதார்த்தம் சாதி.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *