April 29, 2026
VideoCapture_20250302-104646
Share

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13-க்கும் மேற்பட்ட

கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 950 நாட்களாக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த அளவீடு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

 

இந்நிலையில் ஏகனாபுரத்தில் தினமும் மாலை வேளைகளில். நடைபெற்று வரும் ‌அடையாள போராட்டம் 950வது நாளை எட்டிய‌ நிலையில் அக்கிராம மக்கள் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்,சோறு போடும் மக்களை கூறு போட்டு பார்ப்பதா?வஞ்சிக்காதே வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே,நீர்நிலைகளை அழிக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

 

ஏற்கனவே பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் 11முறை கிராம சபை கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியும்,7முறை கிராம சபையினை புறக்கணித்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *