April 29, 2026
Chief Minister - Request
Share

சிப்காட் தலித் மற்றும் சிறுகுறு விவசாயிகள் நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட முதலமைசருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைப்பதற்கு தலித் மற்றும் சிறுகுறு விவசாயிகள் சாகுபடி செய்து வரும் ஆதீனங்கள், அறக்கட்டளைகள், கோவில் குத்தகை நிலங்கள் அபகரித்து, சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிகாரமிக்க அரசியல்வாதிகள் நிலங்களை வாங்கி  பல இடங்களில் குவித்துள்ளனர். அந்நிலங்களை கண்டறிந்து சிப்காட் அமைத்தால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயனளிக்கலாம்.

குறிப்பாக, வடபாதிமங்கலத்தில் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும். ஆரூர் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தினால் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். அதேபோல் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. அந்நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கலாம்.

மாறாக நூறு ஆண்டுகளுக்கு மேல், சிறுகுறு தலித் விவசாயிகள் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கரையாப்பாளையூர் கிராமத்தில் 150 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். மேலும் அவர்களின் குத்தகை உரிமையை உறுதிப்படுத்தி தர முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்.

பேரிடர் காலங்களில் குத்தகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவதால், குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு குத்தகை நிலங்களை உறுதிபடுத்த வேண்டும். அதேபோல அவரவர் வாரிசுதாரர்களுக்கு உரிய குத்தகையை மறுப்பதிவு செய்து தரவேண்டும்.

குத்ததை பாக்கியை காரணம் காட்டி நீதித்துறை இந்நிலங்களை கோவில் சொத்தில் இணைத்து ஏலம் விடுவதை தடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, சிப்காட்டிற்கு நிலம் எடுக்கிறோம் என்ற வகையில் மறைமுக நடவடிக்கையாக நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி  ஏழை எளிய மக்களின் விளைநிலங்கள் அபகரிப்பது கண்டிக்கத் தக்கது. இந்நிலை நீடித்தால் ’உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்க வேண்டி – தீவிர மறுநிலமீட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிவரும்’

மேலும் தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்று, தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீட்டுக்கான இழப்பீடு கிடைக்கப் பெறாத சூழல் நீடிக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் திருக்குவளை தாலுக்காவில் குறுவை பாதிக்கப்பட்டு 10 கோடி ரூபாய் நிவாரணத்திற்கான அரசாணை வழங்கப்பட்டது. இதுவரையிலும் அத்தொகை அவர்களைச் சென்றடையவில்லை

2024ஆம் ஆண்டு ஏற்பட்ட பாடிப்புக்கும் விவசாயிகளுக்கு  உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை

அதேபோல மூன்றாண்டுகள் மகசூலை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமியத்தைப் பெற்றுக் கொண்டு இழப்பீடு தர மறுப்பது சட்டவிரோத செயலாகும். இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து காப்பீடு செய்யும் ஆண்டுகளில் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை பெற்றுதர முன் வரவேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் தரமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை உரிய காலத்தில் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்வதற்கும், உரிய முறையில் பாதுகாத்து சேமிப்பதற்கும் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக சுயநலத்தின் பேரில் துறை சார்ந்த அதிகாரிகள், கொள்முதல் காலத்தில்  பணி மாறுவதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் மிகப்பெரிய நெருக்கடிடை சந்தித்துள்ளது. அதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்  மழையில் நனைந்து வீணாகும் நிலை நீடிக்கிறது.

இந்த அவல நிலையை போக்க தமிழ்நாடு அரசே கொள்முதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தனியாருக்கு தாரை வார்க்கும் உள்நோக்கத்துடனான ’நேரடி கொள்முதல் சதி செயலை’ தடுத்து நிறுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டங்களை முன்வைத்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *