தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் விருது அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரி(டி.இ.ஓ.,), சிறந்த தேர்தல் பதிவு அதிகாரி(இ.ஆர்.ஓ.,), சிறந்த பூத் மட்டத்திலான அதிகாரி(பி.எல்.ஓ.,) மற்றும் சிறப்பு விருதுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த விருதுகள் வரும் 25ம் தேதி( தேசிய வாக்காளர் தினம்) சென்னை கலைவாணர் அரங்கில் காலை10:30 மணிக்கு நடக்கும் விழாவில் கவர்னர் ரவி வழங்க உள்ளார்.
சிறந்த டி.இ.ஓ.,
1. திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன்(18-19 வயதுடைய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல்)
2. காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வி மோகன்( சிறந்த வாக்காளர் பட்டியலை கையாளுதல்)
3. கோவை கலெக்டர் கிராந்தி குமார்- தேர்தல் நிர்வாகம்
