முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
நேற்று மாலை 92 வயது நிரம்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு 10 அளவில் உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் அவரது மறைவை தொடர்ந்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால், இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தொடர்ந்து தேசிய கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர். உடன் இன்று காலை மத்திய மந்திரிசபை கூட்டத்தில் மன்மோகசிங் மறைவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான குழு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.
