ஆரம்பமாகிறது நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்”
2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் தமிழ்நாடு அரசின் கலைப்பாண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்” வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி தீவுதிடலில் மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடிபெறவுள்ளன. இவ்விழாவில் பல வகை பாரம்பரிய உணவுக்கான திருவிழாவும் நடைபெறவுள்ளது. இவ்விழா ஜனவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இடம் : தீவுதிடல்.
நேரம் : மாலை 6.00 மணி முதல்
