June 23, 2026
3bb324eb658102cbc9b78c2b4e70165d
Share

 

1. நேர மேலாண்மை:

நேரத்தை நிர்வகிப்பதன் மூலம், உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து, தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்கலாம். அதனால் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை முன்னுரிமையின் அடிப்படையில் திட்டமிடுங்கள். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்திய மில்லை. எனவே, ஒரு நேரத்தில் ஒரு பணியில்  கவனம் செலுத்துங்கள். இதனால் பணிச்சுமை குறைவதுடன் மன அழுத்தமும் குறையும்.

2.நட்புறவு:

அலுவலகத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவு ஆகியவை மன ஆரோக் கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். உங்கள் சக ஊழியர்களுடன் ஆரோக்கியமான நட்பு, சிறந்த தொடர்பு மற்றும் உறவுகளை பராமரிக்கவும். இது அலுவலகத்தில் சூழ்நிலை மனதிற்கு உகந்ததாக மாறும் நிலையை                 உருவாக்கும். இதனால், மன அழுத்தம் குறையும்.

சில வழிகாட்டுதல்கள்

3. இடைவேளை:

கடுமையாக உழைப்பதற்கு மத்தியில் சிறிது நேர ‘பிரேக்’ எடுப்பது முக்கியம். இடைவேளை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வது உங்கள் உடலுக்கு மட்டு மல்ல, உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளை விக்கும். சில மணிநேரங்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் ‘பிரேக்’ எடுப்பது மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு ஓய்வு அளிக்கிறது. 5-10 நிமிட இடைவெளி எடுத்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அல்லது ஆழ மாக சுவாசிக்கவும். இது உங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

4. தியான பயிற்சி:

தியானம் மற்றும் யோகா ஆகியவை மனதிற்கு அமை தியை வழங்கி, மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட உதவும். மன பதற்றத்தை கட்டுப்படுத்தும். அலுவலகத் தில் மதிய உணவு நேரத்தில் 5-10 நிமிடங்கள் தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

5 . நம்பிக்கை

நேர்மறையாகப் பேசுவதும், தன்னம்பிக்கையைப் பேணுவதும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம். உங்கள் சாதனைகளைப் பாராட்டுங்கள் மற்றும் உங்கள் இலக்கு களைப் பற்றி நம்பிக்கையுடன் இருங்கள். இது மன வலிமையை வழங்குவதோடு, வேலையில் ஊக்கத்தையும் பஊக்கத்தையும்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *