We will bring about changes.
“ஏ.மாரிமுத்து மாற்றங்களுக்காக உழைத்தவர் – நாம் மாற்றங்களை கொண்டுவருவோம்” – நினைவேந்தல் பேரா.அ.கருணானந்தன் நிகழ்வில் நெகிழ்ச்சி உரை.
வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான பொதுமேடை சார்பாக செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு (11/01/2025) நடைபெற்றது.
கால் நூற்றாண்டுக்கு மேல் செய்யாறு அரசி கலைக் கல்லூரியில் உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர், வரலாற்றுத் துறைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் 26 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி – பதவி உயர்வுப் பெற்று குடவாசல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல்வராக பணியிலிருந்த பொழுது பேரா.ஏ.மாரிமுத்து சென்ற மாதம் 12 ஆம் நாள் திரீரென மரணித்தார். அவருக்கும் அவர் நீண்ட காலம் பணியாற்றிய செய்யாறு கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்ந்தப்பெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியரிடன் படத்திறப்பு மற்றும் நினைவு மலர் வெளியீடு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எஸ்.தரணிவேந்தன் நினைவு உரை நிகழ்த்தினார். உடன் செய்யாறு, திருப்போரூர், செய்யூர், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா, வரலாற்று பாதுகாப்பு இயக்கம் கு.இராமகிருட்டிணன், ந.பிரகாசு, செய்யாறு கல்லூரி முதல்வர் கலைவாணி, வரலாற்று துறைத்தலைவர் திரிபுரசுந்தரி, காஞ்சி மக்கள் மன்ற தோழர் மகேஷ், முனைவர் கே.ஏ.ஜோதிராணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ம.கு.பகலவன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு,
பேரா.மாரிமுத்து உள்நோக்கமும் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி தொண்டாற்றும் தோழர், சாதியால் மதத்தால் வேறுபட்டு இருக்கும் மனிதர்களை ஒற்றைக் குடைக்குள் கொண்டுவந்து காட்ட போராடி போராளி, கல்லூரி மாணவர்களுக்கு தன் இல்லத்தை காப்பாகமாகவும் நூலகமாகவும், உணவளிக்கும் உதவிகள் வழங்கும் நிறுவனமாகவும் மாற்றியமைத்த மாமனிதர், சமூக பணிகளை மேற்கொண்ட சமூகவியலாளர், நல்ல கல்வியாளர், வரலாற்று ஆய்வாளர், கதை, கவிதை, நாடகம், நடிப்பு என பல்வேறு கலை வெளிப்பாடுகள் வழியாகவும் சமூக விடுதலைக்காக எழுதிய எழுத்தாளர் என பல்வேறு நினைவுகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஆசிரிய சங்கத்தை நிறுவிய செயல்பட்டவர், தொல்லியல் எச்சங்களை சேகரித்து செய்யாறு கல்லூரியில் வரலாற்று அருங்காட்சியத்தை உருவாக்கியவர், பொறுப்பு மிக்க அரசு பணியாளராகச் செயல்பட்ட பேராசிரியர் என்று மறைந்த மாரிமுத்து அவர்களின் பணிச்சூழலை சுட்டிக்காட்டி – செய்யாறு கல்லூரியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு அவர் பெயரை சூட்டலாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இறுதியாக தலைமை ஏற்று பேசிய, வரலாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.கருணானந்தன் அவர்கள் பேராசிரியருடன் 2006-07 அறிமுகமான நாள் முதல் தொடர்ந்து, சமூக விடுதலை விரும்பியாகவும், பேரறிவாளனாகவும், திருவாகவும், சாதி மத கண்ணோட்டமற்ற பண்பாளராகவும் இருந்தனை நினைவுக் கூர்ந்தார். உடன் அவரது உயரிய பண்பை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டுசெல்ல இந்த நினைவேந்தல் நிகழ்வு பயன்பட வேண்டும் என்று பேசினார். மேலும் வரலாற்றை மாற்றியமைக்க சிந்து நாகரிகம் குறித்த மறு ஆய்வை நிகழ்த்த அவர் வரலாற்று பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பயணித்து அரசின் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றார். ஒவ்வொரு நிலப்பகுதியிலும் இருக்கும் பிரம்மாண்டங்களை எழுதாமல் அந்த பிரமாண்டங்களுக்காக இழப்பை எதிர்கொண்ட மக்களைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் சிந்திப்பதே உண்மையான வரலாறு என்ற ஒருமித்த கருத்துடையவராக அவர் இருந்தார். அரசுப்பணியை மக்களுக்கும் மாணவர்களுக்கும் தொண்டாற்ற செய்ய கிடைத்த வாய்ப்பாக கருதி உண்மையாக உழைத்தவர். நல்ல பண்பாளர், பன்முக பணியாளர், அவர் தன் மீதும் தன் உடல்நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் மறைந்ததை எண்ணி நாம் மெய் என்னும் உடலை பாதுகாக்க வேண்டிய உணர்வையும் உணர்த்தியுள்ளார். இந்த நினைவேந்தல் நிகழ்வின் வழியே சில உணர்வுகளை மறக்காமல் நாம் நம் வாழ்நாளுடன் ஏந்திச் செல்வோம் – என்பதாக பேசினார்.
