Divya,
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
உடன் தி.மு.க.பொருளாளர், டி.ஆர்.பாலு அமைச்சர்கள் கே.என்.சேகர் பாபு ஆகியோர் அவர் தி.மு.க.வில் இணைந்த பொழுது உடன் இருந்துள்ளனர்.
மேலும் திவ்யா அவர்கள் ‘மக்கள் பணி என்னுடைய கனவு’ என்றும் தி.மு.க. பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய கட்சி என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறேன். ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர விரும்புவேன். தி.மு.க. காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் கட்சியாக இருக்கிறது. அதேபோல புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் மதிக்கப்படுகின்றனர். மேலும் எல்லா மதங்களுக்கும் மதிப்பளிக்கக் கூடிய ஒரே கட்சியாகவும் தி.மு.க. இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
