பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்திக்க போலீஸ் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை மறுநாள் (20-01-2025) பரந்தூர் செல்கிறார்.
பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க காவல்துறையின் அனுமதி கேட்டிருந்த விஜய்க்கு இன்று காஞ்சிபுரம் காவல் துறை அனுமதி வழங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, விஜய் திங்கள்கிழமை பரந்தூருக்கு நேரில் சென்று போராட்டக்காரர்களை சந்திக்க உள்ளார்.
