பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு நிரந்தரமாக மூட மத்திய அரசு ஒப்புதல் ..
நாளை 21ம் தேதி முதல் அடைக்கும் பணி துவங்க கண்காணிப்பு குழு அனுமதி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் இயற்கை எரிவாயு கச்சா எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிணறுகள் தோண்டும் பணியைத் தொடங்கி, அப்பணி நிறைவுறும் தருவாயில் 2013 ஏப்ரல் 6ம் தேதி கட்டுக்கடங்காத ஹைட்ரோ கார்பன் எரிவாயு வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.இதனை அறிந்து விவசாயிகளோடு நேரில் பார்வையிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தற்காலிகமாக அடைக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகள் ஆசியாவிலேயே அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு இதுதான். கச்சா எடுப்பதற்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து எதிர்பாராத நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு பீறிட்டு வெளியேறி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தொடர்ந்து இதனை சுற்றி எட்டு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு அடர்த்தியை குறைத்து எரிவாயு வணிக நோக்கத்தோடு விற்பனைக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த போராட்ட குழுவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இன்றும் வழக்குகள் நடந்து வரும் நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி ஆர்.பாண்டியன் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கில் ஆஜராகி வாதாடி இது சட்டவிரோதமானது. இத்திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் பேரழிவை சந்திக்கும். எனவே இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார். அதனை ஏற்று நீதி அரசர் ஓஎன்ஜி.சிக்கு தடை விதித்தார்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொள்கை பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக கூறி ஓ.என்.ஜி.சி.க்கான தடையை நீக்குவதற்கு கோரினர். இதனை ஏற்று நீதிமன்றம் எரிவாயு கிணறை மூட உத்தரவிட்டது.
இருந்தும் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் வணிக நோக்கோடு செயல்பட மறைமுகமாக நடவடிக்கையில் ஈடுபட்டது.இதற்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
இதற்கிடையில் கடந்த 2023 டிசம்பர் மாதம் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது, கடந்த நவம்பர் மாதம் அதற்கான தடையை வழங்கியது. அதனால் நாளை 21.01.2025 முதல் கனரக வாகனங்களை கொண்டு வந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூடும் பணியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
7000 மீட்டர் அளவு வரையிலும் உள்ளே கிணறு மூடும் பணி முடிந்த பிறகு விளைநிலங்கள் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
