April 29, 2026
CCTV recording
Share

சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை வேலையில் இரு சக்கரவாகனத்தில் முன்னும் பின்னும் வெவ்வேறு எண்களுடன் மோசடி கும்பல் தொடர்ந்து ஏமாற்றி வரும் சூழல் ஓராண்டு காலமாக நீடிக்கிறது.

பால் முகவர்கள் விநியோகம் செய்த பாலுக்கானத் தொகையை வசூலிக்க செல்லும் இடங்களிலும், பால் கடைகளிலும், பால் முகவர்களின் வீடுகளிலும்  ஏமாற்றி பண மோசடி செய்யும் கும்பல் ஒன்று, சமீப காலமாக சென்னை மாநகரில் உலாவுகிறது.

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக எஸ்.பால்துரை அந்த மர்ம கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதில் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை (11.00மணி) அவர் இல்லாத நேரம் பார்த்து, மர்ம நபர்கள் அவர் கடையிலிருந்த மகனிடம் ‘விசேஷத்திற்கு பால், தயிர் வேண்டுமென்று சொல்லி பால்துரையிடம் பேச போன் போட்டு தரச்சொல்லி இருக்கின்றனர். பால்துரையிடம் வீட்டு விசேஷத்திற்கு தேவையான பால் தொகைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் அந்த அழைப்பை துண்டித்துவிட்டு அச்சிறுவனிடம் ‘கடையில் ரொக்கப்பணம் எவ்வளவு இருக்கிறதோ கொடுங்கள். நான் அத்தொகையை G.Pay அனுப்பி விடுகிறேன்’ உங்க அப்பாவிடம் பேசிவிட்டேன் என சொல்லி ஏமாற்ற பார்த்திருக்கின்றன.

இடையில் துங்கப்பட்ட அழைப்பை மீண்டும் மீண்டும் அழைத்த பால்துரை சந்தேகித்து,  உடனே வேறொரு எண்ணில் தன் மகனை தொடர்புகொண்டதை கவனித்த ஏமாற்றுக் காரர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இதுபோல அதிகாலை வேலையில் பால் விற்பனையில் பரபரப்பாக இருக்கும் பால் முகவர்களை குறிவைத்து ஒரு மர்ம கும்பல் தொடர்ந்து ஏமாற்றி வருவதை கண்டித்து காவல் துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மனு அளித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *