April 29, 2026
Natural Farmer, Food Security Conference

Erode

Share

பிப்ரவரி 15, 16 இரண்டு நாட்கள் ஈரோடு, சித்தோடு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள டெக்ஸ் வேலி வளாகத்தில் இயற்கை உழவர், உணவு குறித்த பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டி நிகழ்வுகளை தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் ஏற்பாடு செய்கிறது

இஃது இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள இக்கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடாகும்.

மாநாடு நிகழ்வுகள் :
தேசிய ஆளுமைகளின் உரைகள், கருத்தரங்குகள்.
நிலைத்து நீடித்த இயற்கை வழி உழவாண்மையில் ஈடுபட்டவர்களின் அனுபவப் பகிர்வுகள்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு.
உணவு பாதுகாப்பு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள்
இயற்கை பாதுகாப்பு குறித்த அரசுக்கான வழிகாட்ட நெறிமுறைகள்.
தகவல் அறியும் உரிமை சட்டம், கிராம சபை, உள்ளாட்சிகளின் அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த உரைகள் & மாற்று வழிமுறைகள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அமைப்புகளின் கலந்துரையாடல், அனுபவப் பகிர்வு.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு உண்டான செயல் திட்ட உருவாக்கம்.
அரசுக்கு மாநாடு வாயிலாக பிரகடனம் வலியுறுத்துதல்
ஒருங்கிணைந்த முன்மாதிரி இயற்கை உழவாண்மை பண்ணைகளை பயிற்சி மையங்களாகவும் உழவாண்மை சுற்றுலாவுடன் இணைத்தல்

காட்சியகங்கள் :
இயற்கை உழவாண்மையில் உழவர்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்.
பாரம்பரிய நெல், காய்கறி விதைகள், கிழங்குகள் காட்சிப்படுத்துதல்.
உழவாண்மையில் எளிய உழவுக் கருவிகளின் பயன்பாடு மற்றும் கண்காட்சி
கைவினைப் பொருட்கள் கண்காட்சி.

விற்பனை அரங்குகள் :
பாரம்பரிய விதைகள், கிழங்குகள், நெல் ரகங்கள் விற்பனை மற்றும் மரபு விதை பகிர்வு.
இயற்கை உழவாண்மையில் விளைந்த விளைப் பொருட்கள் விற்பனை அரங்குகள்.
வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான தற்சார்பு பொருட்களின் விற்பனை, பயன்பாடு.
இயற்கை ஆடைகள் விற்பனை.
பனை, தென்னை கைவினைப் பொருட்கள் விற்பனை.

இந்நிகழ்வில் பாரம்பரிய சுவையில் இயற்கை உணவு திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இரா.வெற்றிமாறன் : 95666 67708 / ஐந்துணை வேலுச்சாமி : 98428 53068.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *