June 23, 2026
PSLV C-60
Share

நமது நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான NVS-02 செயற்கைக்கோள், GSLV-ராக்கெட் மூலம் இன்று (ஜன.29) விண்ணில் செலுத்தப்படுகிறது .

அமெரிக்காவுக்கு ‘GPS’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (IRNSS) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்த செயற்கைக்கோள் GSLV ,  F-15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை (ஜன.29) 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *