April 29, 2026
ravikumar stalin
Share

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இட ஒதுக்கீட்டுப் போராளிகளை அங்கீகரித்துப் பெருமைபடுத்தியதுபோல் 1978-ல் விழுப்புரம் நகரில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் வி.சி.க எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு மணிமண்டபம், இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான நந்தன் கால்வாய்த் திட்டம் (304 கோடி) உட்பட சுமார் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டங்களை அறிவித்தார். அவருக்கு விழுப்புரம் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இட ஒதுக்கீட்டுப் போராளிகளை அங்கீகரித்துப் பெருமைபடுத்தியதுபோல் 1978-ல் விழுப்புரம் நகரில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *