ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது இந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வார்டு எல்லைகளை வரையறை செய்து, தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
