அமைச்சர் எ.வ. வேலு சட்டசபையில், கூறியதாவது: சென்னை பகுதிகளில் உள்ள கடலில் பாலம் கட்ட முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
