கர்னல் ஜான் பென்னிகுக் 184 -வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவருடைய சிலைக்கு முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எல்.ஆதிமூலம் அவர்கள் தலைமையில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், தென்மண்டல தலைவர் சிவகங்கை மாணிக்கவாசகம், மாடக்குளம் பாசன சங்க தலைவர் மாரிச்சாமி, இருபோக பாசானா சங்க நிர்வாகி குலமங்கலம் திருப்பதி, மதுரை மாவட்ட பொருளாளர் செல்லம், பேரையூர் முத்து மீரான், உக்கிர பாண்டி மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமிக்கதாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடி நிலை நிறுத்தவும், பேபி அணையினை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திடவும், தடையாக இருக்கும் மரங்களை அகற்றி வல்லக்கடவு பாதை வழியாக கட்டுமான பொருட்களை தங்கு தடையின்றி கொண்டு செல்லவும் அணை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்திடவும், அன்னை தமிழ் படகுகளை இயக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் எல்லாவிதமான நிர்வாக பொறுப்புக்களை தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், அணைப்பகுதியில் பணிபுரியும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அணைக்கு சொல்லும் டோல்கேட் மற்றும் வலக்கடவு டோல்கேட் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் இதற்கு தடையாக இருக்கக்கூடிய மத்திய அரசு அணை பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விலக்களித்து 2014 முல்லைப் பெரியாறு அணை உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்திட கேரளா அரசு, தமிழக அரசு, மற்றும் மத்திய அரசு முன்வர வேண்டும் என முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
