உடன் அரிட்டாபட்டி பகுதியை சுற்றிய 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மேம்பாடு, தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க முன்வர வேண்டும் – பி ஆர் பாண்டியன் வலியுறுத்தல்.
மதுரையில் அரிட்டாப்பட்டி பகுதியை சுற்றி 48 கிராமங்களை உள்ளடக்கி டங்ஸ்டன் கனிம வளம் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு டெண்டரை இறுதி செய்துள்ளது. இதனையறிந்த விவசாயிகள் தீவிர போராட்டத்தில் களமிறங்கினர். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
மத்திய அரசு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலத்திற்கான டெண்டர் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாகவும்,மற்ற பகுதிகளுகளில் மறு ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து டெண்டர் இறுதி செய்யும் வரையிலும் தமிழ்நாடு அரசு எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் ஒப்பந்தம் கோரி தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்யும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களோடு குத்தகை உரிமை மேற்கொள்வதும், அதிலிருந்து வரும் வருவாய் முழுமையும் மாநில அரசுகளுக்கு மட்டுமே சொந்தம் என்கிற அடிப்படையில் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு சதி அம்பலம் ஆகியுள்ளது.
எனவே மத்திய அரசை காட்டி மாநில அரசும்,மாநில அரசை காட்டி மத்திய அரசும் தப்பித்துக்கொள்ள நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கு அரிட்டாப்பட்டி பகுதியை முழுமையாக தாரை வார்க்க எடுக்கும் மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் உள்ளடக்கி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்கம், தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு செய்து சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை, வேளாண்துறை, சுற்றுச்சூழல் துறை மூலம் அரசாணைகள் வெளியிட்டு அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு அதனை ஏற்று மறு ஆய்விற்கான அறிவிப்பை கைவிட்டு ஒட்டுமொத்த அரிட்டாப்பட்டியை 48 கிராமங்களிலும் டாங்ஸ்டன் கனிம வளம் எடுப்பதில் இருந்து கொள்கை ரீதியாக கைவிட முன் வர வேண்டும்.
இதனடிப்படையில் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
போராட்டத்திற்கு மதிப்பளிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும்.மாறாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி விவசாயிகளை குழப்பக் கூடாது. விவசாயிகள் தெளிவாக உள்ளார்கள். எனவே போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என எச்சரிக்கிறேன்.
