June 23, 2026
President-Droupadi-Murmu-ahead-of-addressing-a-joi_1719513523333
Share

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முதலமைச்சராக இருந்த பைரன் சிங் கடந்த 9-ந் தேதி பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை பாஜக தலைமை மேற்கொண்டது. ஆனால், புதிய தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில்,

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வன்முறை வெடித்தது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், தற்போது வரை அங்கு ஆங்காங்கே வன்முறை வெடித்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் அமைதியை கொண்டு வரும் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகினார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *