தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது x பதிவில் கீழே உள்ளவாறு பதிவிட்டுள்ளார்.
( வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல.
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
“இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்.*
பேரறிஞர் அண்ணா )
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் மாநிலத்திற்கான நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளது வன்மையாக கண்டித்தும் எதிர்த்தும் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
