பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி தாமதமான பணம் செலுத்தலுக்கு பயனாளர் கூடுதல் அபராதம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைந்து சுங்க சாவடி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து தகராறுகளை குறைக்கும் வகையிலும் பாஸ்டேக் பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குறைந்த இருப்பு, தாமதமான பணம் செலுத்தல் அல்லது தடைசெய்யப்பட்ட டேக் வைத்துள்ள பயனர்களுக்கு இனி கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் (பிப். 17) அமலுக்கு வந்துள்ளது.
வாகனம் டோலைக் கடக்கும் முன்பாக 60 நிமிடங்களுக்கு மேல் பாஸ்டாக் செயலிழந்திருந்தாலோ, கடந்து சென்ற பிறகு 10 நிமிடங்கள் வரை செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். இதற்கான பிழைக் குறியீடு 176 (error code 176) ஆக இருக்கும். இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
