மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்
அதன்படி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் கிரி நகரிலுள்ள நமளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
இது தொடர்பான வீடியோ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அதில் “ஒருகாலத்தில் 40 ரூபாயாக இருந்த பூண்டின் விலை தற்போது 400 ரூபாயாக மாறி விட்டது. அதிகரித்து வரும் பணவீக்கம் சாமானிய மக்களின் பட்ஜெட்டை அழித்துவிட்டது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
