April 29, 2026
1000063409
Share

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, நடுத்தர மக்கள் பலன் பெறும் வகையிலான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

அமளிக்கு இடையே.. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட கடும் அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சில நிமிடங்கள் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்.

வேளாண் துறைக்கான அறிவிப்புகள்;

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்பு பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *