June 23, 2026
P.R.Pandian

Suspicious information

Share

மத்திய அரசின் டங்ஸ்டன் ரத்து திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றாலும், அறிவிப்பில் முழுமையாக அனைத்து கிராமங்களிலும் அத்திட்டம் கைவிடுவதாக முழு விபரம் இடம்பெறவில்லை.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் போராட்டம் வலுத்ததால், பொதுமக்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்துசெய்ய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் நேற்று சுரங்கத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

அப்போது, தமிழ்நாட்டில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படும் என மந்திரி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன், பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மேம்பாட்டு பகுதியில் மட்டும் திட்டத்தை கைவிட ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தமிழக அரசு நாயக்கர்பட்டி உள்ளிட்ட இரண்டு கிராமங்களை மட்டும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மேம்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு மிகுந்த சந்தேகம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 48 கிராமங்களும் இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அறிவிப்பையே மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எனவே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான முழு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு நிரந்தர தீர்வுக்கான தெளிவை தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *