April 29, 2026
Thirukuvalai

Farmers - Protest

Share

இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பொதுத்துறை நிறுவனத்தை1972ல் உருவாக்கியது. அதன் மூலம் விலை நெல்லுக்கான நேரடி கொள்முதல் நிலையங்களை 75 ல் கலைஞர் கொண்டுவந்தார்.

தற்பொழுது ஆட்சியிலிருக்கும் தி.மு.க. தலைமையிலான அரசு அத்திட்டத்தை தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்னும் பெயரில் கார்ப்பரேட்டுகளும், தனியார் பெருநிறுவனங்களும் நேரடி கொள்முதங்களை கைவிடும் அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதனை விவசாயிகள் ஏற்றுகொள்ளுவதாக இல்லை.

இதனை எதிர்த்து திருக்குவளையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டத்தில் தமிழ்நாடு வெளியிட்ட அரசாணையின் நகலை தீயிட்டுக் கொழுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

கார்ப்பரேட்டுகள் கொள்முதலில் அனுமதிப்பதை கொள்கை பூர்வமாக கைவிட்டு விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

திருக்குவளையில் 2023 குறுவையை இழந்து விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அரசு அரசனை வெளியிடப்பட்டது. இதுவரையிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும்.

தற்போது அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் பருவம்மாற்றத்தால் அழுகின. அதனால் 70% மகசூல் இழப்புடன் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

அமைச்சர்கள் , உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டெல்டா பகுதியில் கொள்முதல் அதிகரிக்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *