இம்மாதம் 16-12-2024 அன்று படுகொலை செய்யப்பட்ட விட்டல்குமார் வழக்கில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும் அவர் நண்பரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை தி.மு.க காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என விமர்சித்துள்ளார்.
விட்டல்குமார் வேலூர் மாவட்ட ஆன்மீகப் பிரிவு, மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். இவர் செனற 16 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதற்கிடையில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம்,
நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்கும் பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடையந்துள்ளனர். இதிலிருந்து விட்டல்குமார் படுகொலையில், திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது
வெளிப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. திமுகவோ,
தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. எனவே உடனடியாக விட்டல்குமார் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருத்தல் ஆகாது என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
