சிசிடிவி கேமிரா வீடியோக்களை மத்திய அரசு வெளியிட மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Image Source: Facebook/P Chidambaram
நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? சிசிடிவி கேமிரா வீடியோக்களை மத்திய அரசு வெளியிட மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எம்.பி.க்கள் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க எம்.பி.க்கள் காயம் அடைந்ததாக காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க எம்.பி.க்கள் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? சிசிடிவி கேமிரா வீடியோக்களை மத்திய அரசு வெளியிட மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?
நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?
அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?
உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?” என்று பதிவிட்டுள்ளார்.
