ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ள எதேச்சதிகார பாசிச பாஜக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், போரூர் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் Image Source: x/ @SPK_TNCC
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையில் பேசியதை திசை திருப்பும் நோக்கத்தில், மக்கள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ள எதேச்சதிகார பாசிச பாஜக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், போரூர் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, இப்போதெல்லாம் அம்பேத்கர் பெயரை சொல்வது பேஷன் ஆகிவிட்டது. இத்தனை முறை கடவுள் பெயரைச் சொல்லியிருந்தால் 7 ஜென்மத்துக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ், தி.மு.க, உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடந்த பேரணியில் மோதல் ஏற்பட்டது. இதில், பா.ஜ.க எம்.பி.க்கள் மீது தாக்கியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே போல, பா.ஜ.க எம்.பி.க்கள் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியதாகவும், காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையில் பேசியதை திசை திருப்பும் நோக்கத்தில், மக்கள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ள எதேச்சதிகார பாசிச பாஜக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், போரூர் ரவுண்டானா அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் சொர்ண சேதுராமன், இமையா கக்கன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர்கள் டி. செல்வம் அருள் பெத்தையா, எஸ்.ஏ. வாசு, தளபதி பாஸ்கர், பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ். திரவியம் MC, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
