April 29, 2026
ccccc
Share

காட்டுமன்னார்கோவிலில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் வீராணம் ஏரி வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட 20 கிராமங்களுக்கு100% இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பேரழிவு ஏற்படுகிற பகுதியாக வீராணம் ஏரி பாசனப்பகுதி விளங்குகிறது. ஆண்டுதோறும் இழப்பை சந்திக்கிற விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பெய்த அரியலூர் மாவட்டத்தினுடைய பேரழிவு பெருமழை நீர் வீராணம் ஏரி வழியாக வெள்ளியங்கால் ஓடை வழியாக கொள்ளளவை விட பல மடங்கு தண்ணீர் கூடுதலாக விடுவிக்கப்பட்டது. வழியோர 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அழித்தது. விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு கதிர்வரும் நிலையில் இருந்த பயிர்கள் அழிய தொடங்கியது.

  • மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூடி இந்த 20 கிராமங்களையும் பேரிடர் பாதித்த கிராமங்களாக அறிவித்து 100% இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும். ஏக்கர் 1 க்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
  • வீராணம் ஏரியை தூர்வாரி நீர் கொள்ளளவு உயர்த்துவதோடு, கரைகளை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
    வெள்ளியங்கால் ஓடை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தி அகலப்படுத்தி கொள்ளளவை உயர்த்த வேண்டும்
    – உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அப்பகுதி விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
    அவர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை வைத்து தடுத்து நிறுத்தி = கைது செய்துள்ளனர்.

இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு காவல் துறையை இவ்வாறு அச்சுறுத்துவதால் எதிர்காலத்தில் அதற்கான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும். வேளாண் துறை உயர் அதிகாரிகள் செயல்படாத நிலை உள்ளது குறிப்பாக பேரழிவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான உரிய நிவாரணங்களை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட பார்வையிடுவதை கைவிட்டுள்ளனர். இப்பகுதியில் விவசாயிகளுக்கும் அரசுக்கும் மிகப்பெரிய பின்னடைவு இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன். வலங்கை ஒன்றிய கவுரவத் தலைவர் ராஜகோபால், கடலூர் மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *