சமீபத்தில் மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ‘Gah’ என்னும் கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கிராமத்தில்தான் 1932, பிப்ரவரி 4 ஆம் நாள் குர்முக் சிங் – அம்ரத் கவுர் தம்பதியருக்கு மகனாக மன்மோகன் சிங் பிறந்தார்.
இக்கிராமம் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
குர்முக் சிங் துணி வியாபாரம் செய்தவர். மன்மோகன் சிங்கின் தாயார் இல்லத்தரசியாக இருந்துள்ளார்.
மன்மோகன் சிங் பிறந்த அக்கிராமத்தில் அவரது நண்பர்கள் அவரை ‘மொஹ்னா’ என்றே அழைத்துள்ளனர்.
அங்கு மன்மோகன் சிங் படித்த பள்ளி அவரால் சிறப்பு பெற்றுள்ளது. அப்பள்ளியில் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 17ல் அவர் சேர்ந்துள்ளார்.
அதற்கான ஆவணங்கள் இன்றளவு அங்கு பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கும் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுதப்பட்டுள்ளது.
