April 30, 2026
Talleywal, protest ground
Share

டல்லேவால் உண்ணாவிரதப் போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்.

பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் 38வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வரும் சம்யுக்த்த கிசான் மோர்ச்சா -SKM (NP) தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலோடு நேற்று 01.01.2024 02.01.2024 ஆகிய இரு நாட்களாக பங்கேற்ற SKM (NP) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் கண்ணூரி பார்டரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய விவசாயிகளுடைய உரிமைக்காகவும் நலனுக்காகவும் 38 வது நாளாக தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சம்யுக்த்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளித்து வருகிறோம். கடந்த பார்டரில் 38வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம்

டிசம்பர் 16ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 50 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு 10 ஆயிரம் விவசாயிகள் கைதாகி உள்ளனர்.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி டல்லேவால் உடல்நிலையை கருத்தில் கொண்டு MSP குறித்து அவசர முடிவெடுக்க வேண்டுமென விளக்கமாக வலியுறுத்தி உள்ளார்.

டிசம்பர் 23ல் மெழுவர்த்தி ஏந்தி ஆதரவளித்துள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம்.

பிரதமர் மோடிஅவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் விவசாயிகளின் ஒற்றுமையையும் சீர்குழைக்க முயற்சிக்கிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் டல்லேவால் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதே நேரம் MSP உள்ளிட்ட கோரிக்கைகளின் நியாயத்தை நீதியரசர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே டல்லேவால் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருவதால் நாடு முழுவதும் 100 கோடி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்ட முடிவுக்காக உணர் பூர்வமாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அதே நேரம் டல்லேவால் உடல் நலம் குறித்து மிகுந்த அக்கறையுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து உள்ளனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த மன வலியை அளித்திருக்கிறது.

எனவே மத்திய அரசை வலியுறுத்தியும், டல்லேவால் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டக் குழு அறிவிக்கிற அத்தனை போராட்டங்களையும் தமிழக, புதுச்சேரி விவசாயிகள் முழு மனதோடு ஆதரித்து நிறைவேற்றுவோம் என்கிற உறுதி அளிப்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா விவசாயிகள் இங்கே 20 பேர் வந்திருக்கிறோம் என்றார்.

40 வது நாள் போராட்டத்தில் 5 லட்சம் விவசாயிகள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளார்கள்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *