April 29, 2026
gugesh
Share

உலக செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாக்கர் உட்பட நான்கு பேருக்கு மத்திய அரசின் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் சாதித்த இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதியானவர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கம் (ம) கூட்டமைப்பு பரிந்துரை செய்து வருகிறது.

இதன்படி இந்தாண்டுக்கான கேல் ரத்னா பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

1) உலக செஸ் சாம்பியன் குகேஷ்

2) ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங்

3) பாரா தடகள வீரர் பிரவீன் குமார்

4) ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகர்

ஆகியோருக்கு “கேல் ரத்னா” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17 ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், நான்கு பேருக்கும் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *