April 30, 2026
P. Shanmugam
Share

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் வழங்கு ஒன்றிற்காக நீதிமன்றம் சென்றபொழுதும் ‘நீதிபதியே கூறியிருந்தாலும் தோளிலில் இருந்து துண்டை எடுக்க மாட்டேன்’ என்று உறுதியுடன் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழராவார். இவரை இன்று U.வாசுகி, P. சண்முகம், N. குணசேகரன், K. கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு வெங்கடேசன், K. பாலபாரதி, G. சுகுமாரன், K. சாமுவேல் ராஜ், S. கண்ணன், N. பாண்டி, D. ரவீந்திரன், S. முத்து கண்ணன், K. அர்ஜுனன், K. சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

திருச்சி, லால்குடி, பெருவளநல்லூரில் 196 இல் பிறந்த பெ.சண்முகம் 1979 இலிருந்தே அன்றிருந்த மாணவர் சங்கத்தின் வழியே அரசியலில் இயங்கியவர் ஆவார். தற்போதைய சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ராமசாமி தமிழ் கல்லூரியில் படித்த இவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் என முன்னணி பொறுப்புகளில் இருந்துள்ளார்.

சிபிஐ(எம்) இயக்கத்தின் முழுநேர ஊழியராக செயல்பட்ட பெ.சண்முகம், 1992 இல் உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் ஆவார். தமிழ்நாட்டின் வரலாற்றில் பதிவான ஒப்பற்ற வாச்சாத்தி போராட்டத்தை 30 ஆண்டுகள் வழிநடத்தி வென்று காட்டிய முன்னணி தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக 13 ஆண்டுகளும் 2020 முதல் மாநில தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். பழங்குடி மக்களின் சாதிச் சான்று கோரிய போராட்டங்களிலும், அனைத்து விதமான நிலவுரிமை போராட்டங்களிலும் இவர் களப்போராளியாகப் பங்கேற்றவர். பழங்குடியினர் நிலவுரிமை போராட்டத்தின் வழியே 2006 இல் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வனவுரிமை சட்டம் சாத்தியப்படுத்தியவர். இவரே மோடி ஆட்சிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை பல்லாயிரம் விவசாயிகளை தலைமையேற்று வழிநடத்திய கள நாயகர் ஆவார்.

இவரது சமூகப் பணிகளை பாராட்டி தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கியுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *