காஞ்சிபுரம், செங்கொடியூரில் அமைந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தில் மூலிகை பண்ணை திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மூலம் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களால் மூலிகை பண்ணை திறப்பு விழா நடந்தது,
இவ்விழாவினை காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்துவைத்தார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள், திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட தோழர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
