கடவூர் வானகம் பண்ணையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
இயற்கை பேராசான் நம்மாழ்வார் ஐயா விதைக்கப்பட்ட வானகத்தில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த முன்னோடிகள் பங்கேற்போடு கலந்தாலோசித்து “தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்” உருவானது. அதன் கொள்கை , இலக்கு , செயல் திட்டம், கலந்தாலோசிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டன அதனடிப்படையில் கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு தமிழ்நாட்டின் அனைத்து இயற்கை விவசாயிகள் , இயற்கை விவசாய அமைப்புகள் , சூழல் ஆர்வலர்கள் பங்கேற்புடன் இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு , 2025 – பிப்ரவரி -15, 16 , டெக்ஸ் வ்யாலி, சித்தோடு – ஈரோடு நிகழவிருக்கிறது.
அதன் செயல் திட்டங்களை மூத்த வேளாண் முன்னோடிகளின் வழிகாட்டலுடன் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டு வேலை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து இயற்கை உழவர்களின் ஒன்றிணைந்த இருப்பையும், நஞ்சற்ற உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை எனும் நுகர்வோர் பங்கேற்புடனும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என அனைவரையும் கூட்டியக்கம் அழைத்துள்ளது.

இக்கூட்டியக்கத்தில், வெற்றிமாறன், ஐந்துணை வேலுசாமி, நா. தெ. சிவகுமரன், ஹமாகிரன், வானகம் ரமேவஷ், கார்த்திக் குணசேகரன், விஷ்ணு பிரியன், சிதம்பரம் சுரேஷ்குமார், இரா தயாநிதி, கௌரி, தாய்மண் பிரதீப், வாசிம் ராஜா, கலசபாக்கம் ராஜன், இயல் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
