April 29, 2026
Three-year Bachelor of Education

University of Vels

Share

இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும் 100% உதவித்தொகையுடன் கூடிய B.Sc.,Film Studies மாணவர் சேர்க்கை தொடக்கம்.

சினிமாவை பிடித்த, ஆர்வலர்களுக்கு சினிமா சார்ந்த படிப்பை 100% நிதி உதவியுடன் படிக்க இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை – பண்பாடு ஆய்வகம் (International Institute of Film and Culture) வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மீது ஆர்வமும் விருப்பமும் கொண்ட நபர்கள் அதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள விருப்புவோர் இக்கலை கல்வியில் இணையலாம்.

இக்கலை கல்வியில் படிப்பு மூன்றாண்டு இளங்கலைக்கு உரியது.
இது வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்வியில் ஆறு பருவத்திற்கு மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு கற்பிக்கப்படும்.

இளங்கலை திரைக்கல்வி பயில – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

திரைத்துறையில் சாதிக்க விரும்பி பெரிய கனவுகளிடன் கலைக் கல்வியைப் பயில வரும்பவர்களுக்கு 100% உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இக்கலைக் கல்வி பயில விரும்புவோர் ttps://iifcinstitute.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு : 93632 85306 என்னும் தொலைப்பேசி எண்ணிற்கும் மற்றும் iifcinstituteofficial@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளலாம்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *