April 29, 2026
K.D.Rajendrabalaji

CBI Case Registration

Share

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *