கேரளாவில் முக்கிய உணவான அரிசி பத்திரியை வீட்டிலேயே செய்யலாம்.
3 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு – நன்கு கொத்திக்க விடவேண்டும்.
அதில் 1/2 டீஸ்பூம் கல் உப்பு சேர்க்கவும். உடன் 2 டீஸ்பூம் தேங்காய் எண்ணை சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் 2 கப் அளவு (400 கிராம்) அரிசி மாவை எடுத்து சிறுக சிறுக தண்ணீரில் போட்டு நன்றாக 2 நிமிடம் வரை கலந்துவிட வேண்டும்.
மிதமா சூட்டில் அடுப்பை வைத்து கொஞ்சம் தண்ணீர் இல்லாதவாறு மாவை கிண்டிவிட வேண்டும்
பின்னர் அந்த மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவை உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிலிருந்து தேவையான அளவு மாவை எடுத்து சப்பாத்தி உருட்டுக் கட்டையில் இட்டி உருட்டி (தேய்த்து) எடுத்துக் கொள்ளலாம்.
தேய்ந்த அரிசி சப்பாத்தி மாவை – தோசை கல்லில் எண்ணைத் தேய்க்காமல் – போட்டி கருக விடாமல் பார்த்து வேகவைத்து எடுத்தால் – வெள்ளையாய் அரிசி மாவு சப்பாத்தி தயார்.
அத்துடன் வேண்டிய தொடுகறியை தாயாரித்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
3 கப் தண்ணீர்
1/2 டீஸ்பூம் கல் உப்பு
2 டீஸ்பூம் தேங்காய் எண்ணை
2 கப் அரிசி மாவு (400 கிராம்)
