April 29, 2026
Navy - Firing
Share

காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது நடவடிக்கையின் பொழுது தப்ப முயன்றதாகக் கூறி 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் காங்கேசன் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இச்செயல் கடலோர மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமையும் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு அடிக்கடி இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *