சென்னை புத்தகக் கண்காட்சியில் தினசரி பல படைப்பாளிகளின் சந்திப்பும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் நிகழ்ந்துவருகிறது. அவ்வகையில் இன்று எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய ‘குறுநாவல்கள்’ நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலினை கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளியிட கவிஞரும் கலை இலக்கிய விமர்ச்சகருமான இந்திரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வு நீலம் பதிப்பக அரங்கத்தில் நிகழ்ந்தது.
