காய்ந்த முருங்கை காயின் விதைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன என்று கார்த்திகேயன் விளக்குகிறார்
காய்ந்த முருங்கை காயிலிருந்து விதைகளை எடுத்து அதன் மேல் உள்ள கடினமாக பகுதியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.
விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம், வெந்நீரில் கொதிக்க வைத்து சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம். பொடியாகி டீத்தூளைப் போலவும் பயன்படுத்தலாம்.
மருத்துவ ஆரோக்கிய நலன்கள் :
இதிலிருக்கும் வைட்டமின் மற்றும் மினரல்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் பயன்படுகிறது.
இரத்த அழுத்தத்தை முருங்கை விதைகள் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
முருங்கை விதைகள் இன்சூலீனை அதிகரித்து அவை சக்கரையை (குலுக்கோஸ்) எரிப்பதற்கு உதவுவதால் சக்கரை நோயாளிகளும் இவ்விதைகளைச் சாப்பிடலாம்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களையும் மாத்திரை மருந்துகளையும் மது உள்ளிட்ட பாணங்களையும் ஜீரணிக்க வேண்டிய முக்கிய உறுப்புகளாகும். பொதுவாக இவ்வுறுப்புகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைப்பதில்லை. அதனை தரக்கூடியதாக இந்த முருங்கை விதைகள் இருக்கின்றன.
புற்று நோயை தடுக்கவும் குணப்படுத்தவும் தேவையான Niazimicin என்னும் கெமிக்கல் முருங்கை விதையில் உள்ளது.
இன்னும் ஜீரண மண்டலத்திற்கும் – நல்ல தூக்கத்திற்கும் – நினைவாற்றலை பெருக்குவதற்கும் – மூட்டு வீக்கத்தை சரிசெய்யவும், – முருங்கை விதைகள் பயன்படுகின்றன.
கற்றாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, கீரைகள், ஆப்பில், வைங்காயம் ஆகியவற்றில் இருக்கும் Quercitin என்பது முருங்கை விதைகளில் உள்ளதால், ஆஸ்மா நோயாளிகளும் இதனை எடுத்துகொள்ளலாம்.
கண் பார்வை குறைபாடுகளை போக்கவும் முருங்கை விதைகள் உதவுகின்றன
இரத்தசோகையை குணப்படுத்தவும் முருங்கை விதை பயன்படுகிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் முருங்கை விதைகளை சாப்பிடலாம்.
எடுத்துகொள்ளும் அளவு :
தினசரி ஐந்து முருங்கை விதைகள் மட்டும் போதுமானது
தவிர்க்க வேண்யவர்கள் :
கற்ப காலத்தில் இருக்கும் பெண்கள்
தைராய்டு பிரச்சனைக்கு உரிய நபர்கள்
பிபி மற்றும் சக்கரை நோய்கான மாத்திரைகளை சாப்பிடும் நபர்கள்.
