2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் தயாரிப்பாக SpaDex என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதற்காக திங்கட்கிழமை இரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு விண்கலன்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டன. இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
ஸ்பேஸ் டாக்கிங் சோதனை வெற்றியின் மூலம் உலகிலேயே இந்த செயல்முறையை தொடங்கிய நான்காவது நாடாக இந்தியா தடம் பதித்துள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்புவது விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவுவது தரவுகளை சேகரிப்பது சந்திராயன் – 4 திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக விளங்கும்.
– “SpaDex” திட்டத்தின் பயன்பாட்டு குறித்து ISRO தலைவர் சோம்நாத் விளக்கம்.
