BJP Allegation
மதுரை புதூரில் குடியரசு தின விழாகூட்டத்தில் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜ.க.வால் பேராபத்து என ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அது குடிமக்களுக்கான ஆட்சியாக இல்லை.
பா.ஜ.க. பொறுப்பேற்ற பின்பு இந்தியா வளர்ச்சி அடைந்ததாக குறிப்பிடும் மோடியின் கருத்து ஏற்புடையதாக இல்லை.
அவருக்கு ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் இன்றைய பா.ஜ.க. பயணிக்கிறது
நம் நாட்டில் இன்றும் 20 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். அவர்களின் விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்வதாகச் சொன்ன கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை.
ஆனால் பெரு முதலாளிகள் வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலை நீடித்தால் ப.ஜா.க ஆட்சி அகற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்
