Case Registration
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக சீமான் 4 வழக்குகள் போடப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நா.த..க சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டுசிலையில் தொடங்கி, மரப்பாலம், கச்சேரி, மண்டபம் வீதி பகுதிகளில் அவர் பேசினார்.
தேர்தல் அதிகாரிகளின் அனுமதி இன்றி இவர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 35 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்தும் 2 பிரிவுகளில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் சட்டவிரோதமாக கூடல் உள்ளிட்ட 3 பிரிவுகளிலும் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
