ஓரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளின் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விகுறியாக உள்ளதைச் சுட்டிக்காட்டும் விதமாக அன்பில் மகேஷூக்கு எம்.பி.ரவிக்குமார் கடிதம்.
ஓர் ஆசிரியர் மட்டுமே ஒரு பள்ளியை நிர்வகிப்பது கல்வித் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அந்த வகையில் சுமார் 80,586 மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாக உள்ளது என விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு கடிதம் எழுதியுள்ளார்.
